Skip to main content

Posts

Showing posts from March 21, 2012

விடை கொடு எங்கள் நாடே / Vidai Kodu Engal Nade from Kannathil Muthamittal

விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் ( விடை கொடு ..) கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா வருமா கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா வருமா சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம் ( விடை கொடு ..) எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம் முன் நிலவில் மலரில் கிடந்தோம் பின் இரவில் முள்ளில் கிழிந்